Spotlightசினிமா

பாலாவின் 25; குவிந்த பிரபலங்கள்.. அதிர்ந்த அரங்கம்!

மிழ் சினிமாவில் இதுவரை சுமார் 25 படங்களை இயக்கி தனது இயக்கத்தில் தனி முத்திரை பதித்திருப்பவர் இயக்குனர் பாலா. இயக்குனர் பாலாவின் படங்கள் என்றாலே தனி ரகமாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

பாலாவின் இயக்கத்தில் நடிப்பதென்பது ஒரு நடிப்பு கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த அனுபவம் என்று அவருடன் பணிபுரிந்த நடிகர்கள், துணை இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைவரும் கூறியிருக்கிறார்கள்.

இந்நிலையில், இயக்குனர் பாலாவின் 25வது படமாக உருவாகியிருக்கும் வணங்கான் திரைப்படம் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பாலாவின் திரைப்பயணத்தை மரியாதை செய்யும் விதமாக ”பாலா 25” நிகழ்வு என்ற இரண்டு நிகழ்வுகளும் நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், தமிழ் திரையுலகில் பாலாவுடன் பயணித்த திரைபிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு, இயக்குனர் பாலாவுடன் தங்களுக்கான நட்பு என்ன என்பதை கூறினர்.  தமிழ் திரையுலகமே திரண்டு வந்து இயக்குனர் பாலாவிற்கு மரியாதை செய்தது.

இந்நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும், அரசியல் பிரபலங்கள் பலரும் பாலாவின் திரைப்பயணத்தை வாழ்த்தி மடலும் அனுப்பி வைத்திருந்தனர்.

Facebook Comments

Related Articles

Back to top button