Spotlightதமிழ்நாடு

டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததிற்கு முதல்வருக்கு நன்றி – இயக்குனர் கெளதமன்!

மிழகத்தின் டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததிற்கு முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு இயக்குனர் கெளதமன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, ‘ஹைட்ரொ கார்பன் மீத்தேன் எடுக்க இனி அனுமதி இல்லை என்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.

ஹைட்ரோகார்பன் மீத்தேனை எதிர்த்துதான் கத்திப்பாரா பால போராட்டத்தினை நடத்தி சிறை சென்றோம்.

ஹைட்ரோகார்பன் மீத்தேன் எமனை எதிர்த்து ஐநா சபையிலும் பேசினோம்.

கதிராமங்கலம், நெடுவாசல் மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கிடைத்த வெற்றி.

தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி தனிச்சட்டம் இயற்றவேண்டும்.

எச்சூழலிலும் இவ்வறிப்பு மாறாமலிருந்தால் இவ்வரசை தமிழகம் கொண்டாடும்.’ என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button