Spotlightசினிமா

பிரபு சாலமன் இயக்கத்தில் அஷ்வின் !! 

யக்குனர் பிரபு சாலமன் பல ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். மைனா, கும்கி என வரிசை கட்டும் இவரது வெற்றி படங்களாகும்.
கடைசியாக ராணா, விஷ்ணு விஷால் நடித்து வெளியான காடன் படத்தை இயக்கியிருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கான பணிகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.
இப்படத்தில் ஹீரோவாக குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பல இளைஞர்கள் மற்றும் இளைஞிகளின்  மனதை கொள்ளை கொண்டவர் அஷ்வின். இவரது படங்களுக்காக அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பிரபு சாலமன் இயக்கத்தில் அவர் நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை நிச்சயம் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
விரைவில் படக்குழுவினரிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Facebook Comments

Related Articles

Back to top button