Spotlightவிமர்சனங்கள்

குட்டி ஸ்டோரி; விமர்சனம் 3/5

நான்கு சிறிய படங்களை தொகுத்து ‘குட்டி ஸ்டோரி’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ்.

எதிர்பாரா முத்தம்:

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இக்கதையில் நாயகனாக நடித்திருக்கிறார். இவரே இயக்கியும் இருக்கிறார்.

கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் அமலா பால் இருவரும் கல்லூரியில் நட்பாக இருந்து வருகின்றனர். ஒரு சிறிய பிரச்சனையால் இருவரும் பிரிந்து விடுகின்றனர்.

சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது, அமலா பால் கல்லூரி வாழ்வின் சுவாரஸ்யத்தை உடைக்கிறார்.

காதல், நட்பு இரண்டுக்குள்ளும் இருக்கும் ஒரு ஓட்டம் தான் இந்த கதையின் கரு. அதை எளிதாக கூறியிருந்தாலும், இழுத்துக் கொண்டு சென்று பொறுமையை சோதிப்பதால்… நமக்கு சற்று வேதனைதான்.

அவனும் நானும்:

இயக்கம் : விஜய்

கல்லூரியில் படித்து வரும் மேகா ஆகாஷ், தனது காதலனுடன் நெருங்கி இருந்ததால் கர்ப்பமடைகிறார்.

இந்நிலையில், காதலன் விபத்தில் இறந்து விட, அதன்பிறகு மேகா ஆகாஷ் எடுத்த முடிவுகளே படத்தின் மீதிக் கதை..

அடுத்து என்ன நடக்கும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார் இயக்குனர். க்ளைமாக்ஸ் காட்சிகளும் யாரும் யூகிக்க முடியா வண்ணம்.

உயிரோட்டமான கதைக்களம் தான். இயக்குனர் விஜய்க்கு பாராட்டுகள் ..

லோகம்:

இயக்கம்: வெங்கட் பிரபு ..

வருண் கம்ப்யூட்டரில் கேம் விளையாடும் இளைஞன்.

தனது கம்ப்யூட்டரில் ஆன்லைனில் புது விளையாட்டு விளையாடும் வருண், மறுபக்கம் ஒரு பெண்ணின் நட்பு கிடைக்கிறது.

அந்த நட்பை வருண் காதலாக மாற்றிக் கொள்கிறார். இருவரும் கேம் விளையாட, ஒரு கட்டத்தில் கேமில் அந்த பெண் அவுட்டாகி விட, அப்பெண்ணின் தொடர்பை இழக்கிறார் வருண்.

யார் அந்த பெண்.? மீண்டும் அந்த பெண்ணின் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

வித்தியாசமான கதை தான் என்றாலும், இதை அனைவரும் ஏற்றுக் கொண்டு பொறுமை கொண்டு பார்ப்பார்களா.? என்பது மிகப்பெரும் கேள்விக் குறி.
புதுமுயற்சிக்கு இயக்குனருக்கு வாழ்த்துகள்.

ஆடல் பாடல்

இயக்கம்: நலன் குமாரசாமி

விஜய் சேதுபதி மற்றும் அதிதி பாலன் இருவரும் தம்பதிகள். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள்து.

இந்நிலையில், விஜய் சேதுபதிக்கு தனது செல்போனில் ஒரு பெண்ணின் தொடர்பு கிடைக்க, அந்த தொடர்பு போனில் வளர, இறுதியில் அந்த பெண் வேறு யாரும் இல்லை அதிதி பாலன் தான்.

தனது அறியாமைக்கு விஜய் சேதுபதி மன்னிப்பு கோருகிறார். அப்போது அதிதி பாலனும் தானும் ஒரு தவறு செய்து விட்டதாக கூறுகிறார். வெடிக்கிறது பூகம்பம்.

பின், இருவரும் இணைந்தார்களா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

விஜய் சேதுபதி தனது கேரக்டரை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். ஏனோ, விஜய் சேதுபதிக்கும் அதிதி பாலனுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகாததால், இறுதி வரை கதைக்குள் ஈர்ப்பு இல்லாமல் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

நான்கு தொகுப்புகளிலும் நிறைகள் இருந்தாலும் அதற்கு ஈடு கொடுத்தாற்போல் குறைகளும் இருக்கின்றன..,

Facebook Comments

Related Articles

Back to top button