Spotlightசினிமா

முதல் படம் ‘திருநங்கை’, இரண்டாவது படம் ‘நிர்வாணம்’; என்ன சொல்ல வருகிறார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி!

தாதா 87 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தவர் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி. சாருஹாசன், ஆனந்த், ஸ்ரீ பல்லவி நடிப்பில் வெளிவந்த ‘தாதா 87’ மிகப்பெரும் அளவில் பேசப்பட்டது.

ஒரு திருநங்கையின் காதலை மையப்படுத்தி உருவான அப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி’க்கு பாராட்டு மழை குவிந்தது.

இந்நிலையில், தனது இரண்டாவது படமாக ‘பீட்ரூ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அம்சவர்தன் ஹீரோவாக நடித்து வருகிறார். கையோடு தனது மூன்றாவது படத்தையும் இயக்கி வருகிறார் விஜய்ஸ்ரீ ஜி.

இப்படத்திற்கு ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’(PUBG) என்று டைட்டில் வைத்துள்ளார். இதில் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், ஐஸ்வர்யா தத்தா முதன்மை கேரக்டரில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், ஜுலி, அனிதா, ரித்திகா சரண் என பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில், ஐஸ்வர்யா தத்தா நிர்வாண கோலத்தில் நடித்திருப்பதாக தகவல் மிக வேகமாக பரவி வருகிறது. என்ன மாதிரியான கதைக்களம் என்று யாரும் யூகிக்க முடியாத அளவில் இப்படத்தினை இயக்கி வருகிறாராம் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.

முதல் படத்தில் திருநங்கையின் காதல், இரண்டாம் படத்தில் நாயகி நிர்வாணம்..? இயக்குனர் என்னதான் சொல்ல வருகிறார் என்பதை படம் வெளிவரும் போது நாம் பார்க்கலாம்.

Facebook Comments

Related Articles

Back to top button