
தாதா 87 படத்தினை இயக்கிய இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி அடுத்ததாதாக ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (PUBG) என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் முழுப் படத்தையும் முடித்து 2020 சம்மருக்கு இப்படத்தை திரையிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி தனது அடுத்த படத்தின் தலைப்பையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஒரு முன்னனி நட்சத்திரம் இப்படத்தில் முதன்மை நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இப்படத்திற்கு ‘பஜாரி’ எனவும் டைட்டில் வைத்துள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளதாக இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி தெரிவித்துள்ளார்.
Facebook Comments





