
மோகன் ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட் மற்றும் ஷீலா நடிப்பில் உருவாகியுள்ளது ‘திரெளபதி’.
இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுவரை யூ டியூப் தளத்தில் சுமார் 4 மில்லியன் பார்வையாளர்களை இந்த டீசர் கடந்துள்ளது.
படத்தின் இறுதி கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தினை தமிழ்நாட்டில் வெளியீடும் உரிமையை ’7ஜி பிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சிவா கைப்பற்றியுள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
Facebook Comments





