Spotlightசினிமாவிமர்சனங்கள்

எக்கோ – விமர்சனம் 2.5/5

இயக்குனர் நவின் கணேஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ஆஷிஸ் வித்யார்த்தி, வித்யா பிரதீப் மற்றும் பூஜா ஜாவேரி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “எக்கோ”.

கதைப்படி,

ஸ்ரீகாந்த் – பூஜா இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். தனது மாமனாரின் நிறுவனத்தில் பணிபுரிகிறார் ஸ்ரீகாந்த்.

இரவு நேரத்தில், ஸ்ரீகாந்தின் கனவில் மட்டுமல்லாமல் நினைவிலும் ஏதோ ஒரு அமானுஷ்யம் தொந்தரவு செய்கிறது..

தூக்கம் தொலைத்து நிம்மதி தொலைத்து தவித்த ஸ்ரீகாந்த், அமானுஷ்யத்தை துரத்தும் நபராக வரும் ஆஷிஷ் வித்யார்த்தியை நாடுகிறார்..

இதற்குமுன், என்ன நடந்தது என ஆஷிஷ் கேட்க, தன்னுடைய முதல் மனைவியான வித்யா பிரதீப்பை பற்றி கூறுகிறார் ஸ்ரீகாந்த்.

சில திடுக்கிடும் தகவல்களை அவரிடம் கூறுகிறார் ஸ்ரீகாந்த். கதை ப்ளாஷ் பேக் காட்சிகளாக செல்கிறது.

அதன்பிறகு என்ன நடந்தது…? அந்த அமானுஷ்யம் யார்.?? அது அமானுஷ்யம் தானா.??? ஸ்ரீகாந்திற்கு என்ன நடந்தது.?? என்பதே படத்தின் மீதிக் கதை…

கொடுத்த கேரக்டரை நன்றாகவே செய்து முடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த். இருந்தாலும் ஆங்காங்கே சற்று நடிப்பது போன்ற உணர்வை கொடுத்ததை தவிர்த்திருந்திருக்கலாம்.

குடும்ப பெண்ணாக ஸ்ரீகாந்தின் மனைவியாக நடித்து காட்சிகளுக்கு அழகு சேர்த்திருந்தார் வித்யா பிரதீப்…

பாடல் மற்றும் காதல் காட்சிகளில் மிளிர்கிறார் பூஜா…

பாடல்கள் மற்றும் ஒளிப்பதிவு இரண்டும் ஓகே ரகமாக தான் இருந்தது….

கதையில் பெரிதாகவே கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். பல படங்களில் பார்த்த கதையையே இதிலும் பயன்படுத்தியிருப்பது பெரிய பலவீனம்…

இருந்தாலும் சொல்ல வேண்டியதை அழகாக சொல்லிவிட்டுச் சென்றதற்காக படக்குழுவினருக்கு வாழ்த்துகள் கூறலாம்..

Facebook Comments

Related Articles

Back to top button