
Written & Directed – Lokkesh Ajls
Cast: Naveen Chandra, Reyaa Hari, Shashank, Abirami, Dileepan, Riythvika, Aadukalam Naren, Ravi Varma, Arjai , Kireeti Damaraju
Music Director – D.Imman
Creative Producer – Prabu Solomon
Co-Producer – Gopalakrishna.M
Director of Photography – Karthik Ashokan
Editor – Srikanth.N.B
Art Director – P.L. Subenthar
Action Director – Phoenix Prabhu
கதைப்படி,
போலீஸ் உயரதிகாரியான நாயகன் நவீன், நேர்மையான ஒரு அதிகாரியாகவும் திறம்பட பணிபுரியும் ஒரு அதிகாரியாகவும் வருகிறார். கொடுக்கப்படும் வழக்குகளை தனது திறமையால் திறம்பட கையாண்டு வழக்குகளை முடித்து வைக்கிறார்.
அப்படியாக, சிட்டிக்குள் தொடர்ந்து அடுத்தடுத்து சில நபர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் முழுவதுமாக எரிக்கப்பட்டும் கிடைக்கின்றன.
இந்த வழக்கை விசாரிக்கிறார் மற்றொரு போலீஸ் அதிகாரியான ஷாஷாங். வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் கொலைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், ஒரு பெரும் விபத்தில் ஷாஷாங் சிக்கிக் கொள்கிறார்
அதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார் ஐபிஎஸ் நவீன். இவருக்கு துணையாக சப் இன்ஸ்பெக்டர் திலீபனும் வருகிறார். நவீன் தனது பாணியில் விசாரணையை தொடங்க, வழக்கானது அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.
இறுதியில், இந்த படுகொலையை செய்து வரும் அந்த நபர் யார்.?? இந்த தொடர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் அந்த மர்மம் தான் என்ன.?? என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஆரம்பத்தில் மாஸான எண்ட்ரீ கொடுத்து படத்தின் கதாபாத்திரத்தோடு ஒன்றிவிட்டார் நாயகன் நவீன். தனது பார்வையாலும் தனது உடல் மொழியாலும் மிக எளிதாக அரவிந்தன் கதாபாத்திரத்தோடு நம்மையும் பயணம் செய்ய வைத்துவிட்டார் நவீன்.
ஆரம்பத்தில், வங்கியில் கொள்ளையடித்த கூட்டத்தை மிக எளிதாக பிடித்து, அவர்களை பந்தாடிய காட்சிகள் படத்தின் வேகத்திற்கு பெரிதாக கைகொடுத்து விட்டது. மேலும், நடை, உடை, மிடுக்கான தோற்றம், வசன உச்சரிப்பு, சண்டைக் காட்சிகள் என தனக்கே உரித்தான பாணியில் மிகச் சரியாக தனது கதாபாத்திரத்தை செய்து முடித்திருக்கிறார் நவீன்.
தொடர்ந்து, ஷாஷாங் மற்றும் திலீபன் இருவருக்கும் மிகப்பெரும் வலுவான கதாபாத்திரம் தான். படம், ஆரம்பிக்கப்பட்டு சென்று கொண்டிருக்கும் போது சிறப்புத் தோற்றத்தில் வந்து தனது கதாபாத்திரத்தை மிக அழகாக செய்து முடித்துச் சென்று விட்டார் நடிகை அபிராமி.
ப்ளாஷ் பேக் காட்சிகள் கண்களிலிருந்து கண்ணீரை எட்டிப் பார்க்க வைத்துவிட்டது. ப்ளாஷ் பேக் காட்சியில் ஒவ்வொன்றையும் நகர்த்திக் கொண்டு சென்ற விதத்திற்காகவே இயக்குனரை பெரிதாகவே பாராட்டலாம்.

எதனால் அந்த மர்ம நபர் சைக்கோ கில்லராக உருவெடுத்தார் என்பதை விளக்கிய விதம் “ரியலி டச் தான்”..
இதுவரை எந்த படத்திலும் பார்த்திராத ஒரு கதையை மிக கவனமாக கையாண்டு அதை தெளிவாக காட்சிப்படுத்தி அழகான படைப்பாக படைத்திருக்கிறார் இயக்குனர்.
மேலும், படத்தில் நடித்திருந்த இளம் வயது கதாபாத்திரங்கள் இப்படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். அவர்கள் கொடுத்த ஒரு ஃபவுண்டேஷனே இப்படத்தினை பெரிதாக தாங்குவதற்கு கைகொடுத்திருக்கிறது.
ரித்விகா, ரேயாஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜய் உள்ளிட்ட நடிகர் நடிகைகளும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை மிக அழகாக செய்து முடித்திருக்கின்றனர்.
திரைக்கதையின் வேகம் நம்மை எந்த இடத்திலும் கண்களை திரையை விட்டு விலகாமல் பார்த்துக் கொண்டது.
டி இமானின் இசையில் விடியாத வானம் என்ற மனோவின் குரலில் உருவான பாடல் நெஞ்சை உலுக்கும்.
பின்னணி இசையில் இதுவரை கண்டிராத ஒரு மேஜிக்கை இப்படத்தில் நிகழ்த்தியிருக்கிறார் டி இமான்.
கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு தூண் என்றே கூறலாம்.
ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு சுபேந்தரின் கலை வடிவம் என படத்திற்கு அனைத்துமே பலம் தான்.
சீரியல் கில்லிங் இன்வஸ்டிகேஷன் படமான இதை மிகவும் நேர்த்தியாக கையாண்டு, தான் ஒரு மிகச் சிறந்த இயக்குனராக தன்னை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் லோக்கேஷ் அஜ்லஸ்.
மொத்தத்தில்,
Eleven – BRILLIANT





