Spotlightசினிமா

எலான் மஸ்க் பகிர்ந்த “தப்பாட்டம்” படத்தின் ஸ்டில்; சிலாகிக்கும் துரை சுதாகர்!

எக்ஸ் தளத்தின் நிறுவனர் எலான் மஸ்க் அவர்கள் தமிழில் வெளிவந்த தப்பாட்டம் என்ற படத்தின் ஸ்டில் ஒன்றை தனது தளத்தில் பகிர்ந்திருக்கிறார். அதை ஒரு மீமாக மாற்றி அதனை வெளியிட்டிருக்கிறார் எலான் மஸ்க்.

இதுகுறித்து படத்தின் ஹீரோ துரை சுதாகர் பேசும் போது, “ காலையில் இருந்தே போன் கால்ஸ் வந்துகொண்டே இருக்கிறது. தப்பாட்டம் படம் என்னுடைய முதல் படம். சின்ன வயதில் இருந்தே நான் பார்த்து வளர்ந்த பல விஷயங்களை அதில் சொல்லி இருந்தோம்.

குறிப்பாக தப்பாட்டம் என்று சொல்லப்படும் பறை இசைக் கலை பற்றியும் எவரோ சொல்வதை எண்ணி ஒரு பெண் மீது அவதூறு சொல்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் சொன்ன படம்.

தப்பாட்டம் படம் எனக்கு நல்ல நண்பர்களை சினிமாவிற்குள்ளும் சினிமாவிற்கு வெளியேயும் கொடுத்தது. அதன் விளைவால் தான் களவாணி 2, பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இன்று எலான் மாஸ்க் அந்த படத்தின் ஸ்டில்லை பகிர்ந்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளார். இந்த படத்தை எலான் மாஸ்க் பகிர்ந்திருந்தாலும் அந்த பெருமை எல்லாம் அவர் வரைக்கும் இதைக் கொண்டு சேர்த்த ரசிகர்களையே சேரும்.

எலான் மாஸ்க், அவரிடம் கொண்டு சேர்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், சமூக வலைதளவாசிகள், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் என அனைவருக்கும் என் நன்றிகள்.

நல்ல படைப்புகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். இன்னும் சில கதைகள் கேட்டு இருக்கிறேன். உங்கள் ஆதரவு எப்போதும் எனக்கு இருக்கும் என நம்புகிறேன்.நன்றி.” என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button