Spotlightவிமர்சனங்கள்

எம்பிரான் விமர்சனம் 2.75/5

நாயகன் ரெஜித் மேனன் ஒரு டாக்டர். தனது தாத்தா சந்திரமெளலியோடு வளர்ந்து வருகிறார் நாயகி ராதிகா ப்ரீத்தி.

நாயகனை ஒரு தலையாக காதலிக்கிறார் நாயகி ராதிகா. அவரை சந்தித்து காதலை வெளிப்படுத்தும் நேரத்தில் விபத்தில் சிக்கிக் கொள்கிறார் நாயகியும் அவரது தாத்தாவாக வரும் சந்திரமெளலியும்.

சந்திரமெளலி சம்பவ இடத்தில் இறந்துவிட, கோமா நிலைக்கு சென்று விடுகிறார் நாயகி.

பின், ராதிகாவிற்கு சரியானது..?? ராதிகாவின் காதல் ரெஜித் மேனனுக்கு தெரிந்ததா..?? காதல் கைகூடியதா..??? இதுவே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ரெஜித் மேனன், கதைக்கேற்ற சரியான பொருத்தம்தான். காட்சிக்கு காட்சி அழகு சேர்க்கிறார். சரியான கதை அமைந்தால் கோலிவுட்டில் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார்.

படத்திற்கு மிகப்பெரிய பலமே நாயகி ராதிகா ப்ரீத்தி தான். அழகாக இருக்கிறார். அவருடைய கண்கள் கவிதைகள் பேசுகின்றன. கோவிவுட்டில் அடுத்த கட்டத்திற்கு நிச்சயம் அடியெடுத்து வைப்பார்.

தனது அனுபவ நடிப்பை அளந்தெடுத்து நடித்திருக்கிறார் சந்திரமெளலி. பிரசன்னாவின் பின்னனி இசையில், படம் முழுவதும் ஒரே இசை வருவது சற்று எரிச்சலடைய வைத்துவிட்டது.

புகழேந்தியின் ஒளிப்பதிவு ஓகே ரகம் தான். அழகான காதல் கதையை கொடுக்க எண்ணி, இயக்குனர் சற்று சறுக்கியிருக்கிறார். படத்தின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம்.(ஏற்கனவே படத்தின் நீளம் 2 மணி நேரத்திற்கும் குறைவு தான்)

நம் மூதாதையர்கள், கனவில் வந்து தனக்கு நடக்கப்போகும் நல்லது கெட்டதை முன்னரே அறிவிப்பார்கள் என்ற ஒரு செய்தி புதிதான் என்றாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றுதான். இதை கூறியதற்காகவே இயக்குனருக்கு பெரிய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளலாம்.

எம்பிரான் – அழகான காதல் பயணம்…

Facebook Comments

Related Articles

Back to top button