நடிகர்கள் : கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா, ராஜேந்திர பிரசாத், பானுப்பிரியா
இயக்கம்: நாக் அஷ்வின்
இசை: மைக்கி ஜே மேயர்
ஒளிப்பதிவு: Dani sanchez – Lopez
தயாரிப்பு: C. Ashwini Dutt, Swapna Dutt, Priyanka Dutt
விமர்சனம்: பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்.
சாவித்திரி பற்றி தெரியாத பல உண்மைகளை, நிகழ்வுகளை வெளியே எடுத்து கூறியிருக்கிறார்கள்.
சாவித்திரியின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார்.
பல படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தாலும், இதுவே அவரது முதல் படம் போன்ற ஒரு நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். அவரை கேலி செய்தவர்கள், அவரின் நடிப்பை விமர்சனம் செய்தவர்கள் இப்படத்திற்கு பிறகு நிச்சயம் அவருக்கு புகழாரம் சூட்டுவார்கள்.
இப்படத்திற்காக நிச்சயம் பல விருதுகளை வாங்கிக் குவிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. குழந்தைத்தனமான ஒரு நடிப்பில் ஆரம்பித்து இந்திய சினிமா திரும்பி பார்க்கும் அளவிற்கு மாபெரும் நடிகையாக தன்னை மாற்றிக் கொண்டது வரை சாவித்திரியின் உடல்வாகுவை கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இக்காலத்தில் அக்காலத்து நடிகையர் திலகத்தை பற்றி யாரும் தெரியாத பல விஷயங்களை வெளிக்கொணர்ந்தமைக்காக இயக்குனருக்கு ஒரு பெரிய பூங்கொத்து வழங்கலாம்.
இசையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு, கலை, நடனம் என அனைத்தும் படத்திற்கு மிகப்பெரிய உயிரோட்டமாகதான் இருந்துள்ளது.
நடிகையர் திலகம் – வெற்றி திலகம்…