
நேற்று முன்தினம் கமலின் திரைப்பயணம் 60 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக உங்கள் நான் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரளான நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொண்டனர். இதில், நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையுலக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் காமெடி ஜாம்பவான் வடிவேலு.
நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு, ‘ நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நான் நடிக்கவிருக்கிறேன். கமலின் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமாகியிருக்கிறேன். மீண்டும் என் ரசிகர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.’ என்று கூறினார்.
பல வருடமாக திரையில் தோன்றாமல் இருந்த வடிவேலுவின் இந்த செய்தி அவரின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
Facebook Comments