
ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble) திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ். ராஜமவுலி வழங்கும் இந்த திரைப்படம் 2026 அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
‘Don’t Trouble The Trouble’ படத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் சாரா பலேகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சூரி என்ற கதாபாத்திரத்தில் ஃபஹத் ஃபாசிலும், திவ்யா என்ற கதாபாத்திரத்தில் சாரா பலேகரும் நடித்துள்ளனர்.
கலகலப்புடன் கூடிய ஃபேண்டஸி சாகச திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் வகையில் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபேண்டஸியான பின்னணியில் படத்தின் முக்கிய ஜோடியை காட்சிப்படுத்தியுள்ள இந்த போஸ்டர், படத்தில் இடம்பெறவுள்ள மாயாஜால உலகத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி இப்படத்தை இயக்கியுள்ளார். தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்டா மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
ஏற்கனவே ‘Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. படத்தின் கதையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஃபேண்டஸி அம்சங்களுக்கான முன்னோட்டத்தையும் அந்த டீசர் வழங்கியது. வித்தியாசமான கதைக்களம் மற்றும் தனித்துவமான ஃபேண்டஸி உலகம் ஆகியவை இப்படத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, படத்தின் இசை தொடர்பான அப்டேட்டுகளையும் படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இசையமைப்பாளர் கால பைரவா இசையில் உருவாகியுள்ள ‘கேக்கு வாக்கு’ (Cakeu Walku) என்ற பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஃபஹத் ஃபாசில் தொடர்ந்து வித்தியாசமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நிலையில், ‘Don’t Trouble The Trouble’ படத்தில் அவர் ஏற்றுள்ள சூரி கதாபாத்திரம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேண்டஸி, நகைச்சுவை மற்றும் சாகசம் என பல அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள ‘Don’t Trouble The Trouble’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் 2026 அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் ‘Don’t Trouble The Trouble’, ரசிகர்களுக்கு ஒரு கலகலப்பான மாயாஜால ஃபேண்டஸி அனுபவத்தை வழங்க தயாராகி வருகிறது.





