
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாளை இரவு 8 மணி முதல் 15 நாட்களுக்கு முழு முடக்கம் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு அனைத்து அலுவலகங்களும் மூடப்படும் எனவும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ரயில், பேருந்து சேவை தொடரும் எனவும் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் எனவும் உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். மக்கள் வீடுகளில் இருந்து பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
Facebook Comments