Spotlightசினிமா

உலக சினிமாவை வியக்க வைக்க வருகிறது ‘பாஹி 3’!

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகி உள்ள படம் பாஹி 3.

இப்படத்தில் டைகர் ஷெராஃப் ரோனி எனும் கதாபாத்திரத்திலும் , ரித்தேஷ் தேஷ்முக் விக்ரம் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள் . சிறு வயதிலிருந்தே ரோனி , விக்ரம் ஆகியோர் இடையேயான பிணைப்பு பிரிக்கமுடியாது. விக்ரமிற்கு எந்த ஒரு பிரச்சனை நிகழ்ந்தாலும் ரோனி முதல் ஆளாக வந்து நிற்கும் சகோதரன் .

ஒரு கட்டத்தில் விக்ரம் முக்கிய வேலை காரணமாக வெளிநாடு செல்கிறார் . அங்கு அவர் கடத்தப்படுகிறார் . சகோதரனை தேடி செல்கிறார் ரோனி . விறுவிறுப்பான ,ஆகஷன் காட்சிகள் நிறைந்த பாஹி 3 படத்தில் ஷரதா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .

இந்தப் படத்தின் டிரைலர், பாடல்கள், மேக்கிங் காட்சிகள் ஆகியவை ரசிகர்களுக்கிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வரும் மார்ச் 6 ஆம் தேதி மிக பிரம்மாண்ட வெளியீடாக திரைக்கு வருகிறது .

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close