நடிகர் சிவகார்த்திகேயன் எப்போதும் அவர் பேசுகிற அவரது நகைச்சுவையான வரிகளை ஒத்திருக்கிறார். இவையே அவரது வெற்றியின் முக்கிய கூறுகளாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளன. இப்போது, அவர் தனது ஆர்வத்தால் ஒரு பாடலாசிரியராக மாறி, நடிகராக உருவாக்கிய அதே தாக்கத்தை கொடுத்திருக்கிறார்.
நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தில் தான் இந்த இளம், அழகான மற்றும் எழுச்சியூட்டும் ஐகான் சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளர். அவர் எழுதியுள்ள ‘கல்யாண வயசு’ பாடலுக்கு அனிருத்தின் இசை அழகியலை கொடுத்து இருக்கிறது. சிவகார்த்திகேயன், அனிருத், நடன இயக்குநர் சதீஷ் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் பங்கு பெற்ற வீடியோ வடிவிலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் அதன் எதிர்பார்ப்பு ஜெட் வேகத்தில் எகிறியது.
சிவகார்த்திகேயன் ஏற்கனவே அனிருத் இசையமைப்பில் பின்னணி பாடகராக தன்னை நிரூபித்த நிலையில், ‘கல்யாண வயசு’ பாடலில் சிவகார்த்திகேயன்-அனிருத் இணை புதிய பரிமாணத்தை நிரூபித்து, இசை அட்டவணையில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்த பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.