செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “நானே வருவேன்”.
இந்த படத்தினை ”வி கிரியேஷன்ஸ்” சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
வரும் 29 ஆம் தேதி அதாவது நாளை மறுதினம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பு பெற்றிருக்கிறது.
பல வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் & தனுஷ் கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், படத்தின் ப்ரொமோஷன் பணிகள் தற்போது அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.
படத்தின் நீளமும் பெரிதளவில் (2 மணி நேரம் 2 நிமிடங்கள்) இல்லாமல் இருப்பதால், திருச்சிற்றம்பலம் கொடுத்த வெற்றியை இப்படமும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– VIVEK AMIRTHALINGAM