
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தர்பார்’.
இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது.
இதன் ட்ரெய்லர் இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் வெளியாக இருக்கிறது. ரசிகர்கள் கொண்டாட்டத்தில் குதித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அவர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
ஆம், படத்தின் வெளியீட்டு தேதி தான். ஜனவரி 9 ஆம் தேதி வியாழக்கிழமை இப்படத்தினை திரைக்குக் கொண்டு வர அனைத்து பணிகளும் நடைபெறுகிறதாம்.
இதனால், ரசிகர்கள் மேலும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Facebook Comments





