Spotlightவிமர்சனங்கள்

கல்தா – விமர்சனம் 3/5

மிழக எல்லையோர கிராமமாக இருக்கிறது தன்னிலங்காடு. கேரள மாநிலத்தில் இருந்து இறைச்சி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை அந்த கிராமத்தில் கொட்டி வருகிறது ஒரு கும்பல். இதற்கு, அப்பகுதியில் இருக்கும் கவுன்சிலர், எல் எல் ஏ மற்றும் காவல்துறை அதிகாரிகள் என பலரும் பணம் பெற்றுக்  கொண்டு இந்த நாச வேலைக்கு துணை போகின்றனர்.

இதனால் அந்த கிராம மக்கள் பலரும் பல விதமான நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனைக் கண்டு அக்கிராமத்தில் உள்ள, இளைஞர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர்.

இவர்களது, முயற்சி வெற்றி பெற்றதா..?? அல்லது அதிகார வர்க்கம் பண வர்க்கம் படைத்தவர்களின் சதி வேலை வெற்றி பெற்றதா..??? என்பதே படத்தின் மீதிக் கதை.

மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் அறிமுகமான ஆண்டனி, இப்படத்தில் குணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். மனைவியுடனான காதல், மக்களுக்கான புரட்சி, என தனது கேரக்டரை திறம்பட ஏற்று நடித்திருக்கிறார்.

படத்தின் நாயகனாக வரும் சிவ நிஷாந்த், அறிமுக படம் போல் இல்லாமல் மிக நேர்த்தியாக நடித்து கதாபாத்திரத்தோடு வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

ஆக்‌ஷன், காதல், நடனம் என மூன்றிலும் தனது திறமையை காட்டி ரசிகர்களின் பாராட்டினை பெறுகிறார்.

நாயகிகள் அய்ரா மற்றும் திவ்யா இருவரும் தனக்கான கேரக்டரை நடித்து கொடுத்திருக்கிறார்கள்.

அப்புகுட்டியின் முகத்தில் எப்படி வில்லத்தனத்தை பார்ப்பது..?? சுத்தமாக எடுபடவில்லை..

ஒரு அழகான கதையை கையில் எடுத்த இயக்குனர், அதை சொல்லும் விதத்தில் சற்று தடுமாறியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகள் தமிழ்நாட்டை மறைமுகமாக அழித்து வருகிறது என்ற ஒரு உண்மையை உரக்க, தைரியமாக எடுத்துக் கூறிய இயக்குனருக்கு பெரிய கைதட்டல் கொடுக்கலாம்.

இந்த ஒரு கொடுஞ்சம்பவத்திற்கு உடனடி தீர்வு நாம் எட்டப்படாமல் இருந்தோமேயானல் பல விளைவுகளை தமிழக மக்கள் சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை இயக்குனர் இப்படத்தின் வாயிலாக கூறி சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

இயக்குனர் ஹரி உத்ராவிற்கு பெரிய பாராட்டுகள்..

வாசுவின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்.

ஜெய் க்ரிஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னனி இசையில் இன்னும் சற்றும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஆங்காங்கே எட்டிப் பார்த்த சில லாஜிக் ஓட்டைகளை இயக்குனர் சற்று கூர்ந்து கவனித்திருக்கலாம்.

கல்தா – மக்களுக்கான விழிப்புணர்வு…

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close