
இயக்குநர் D.I. கபில் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘LOVE PROJECT’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. காதலை புதிய கோணத்தில் சொல்லும் இத்திரைப்படம், இன்றைய இளைஞர்களின் காதல், உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும்படங்களில் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்ட D.I. கபில், தனது முதல் முழுநீள திரைப்படமான ‘LOVE PROJECT’ மூலம் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தில் சங்கீதா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் Vijay TV சக்திவேல், குண்டு சத்யா, வினோத், விஜய் சேனாதிபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவை சாதிக் கபீர், இசையை சிமியோன் டெல்பர், பாடல்களை டெல்பர், படத்தொகுப்பை அபினேஷ், நடன அமைப்பை தேவா கவனித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் D.I. கபில்.
படம் குறித்து D.I. கபில் கூறுகையில், “இன்றைய தலைமுறையின் காதலை புதிய பார்வையுடன் ரசிகர்களிடம் கொண்டு செல்லும் முயற்சிதான் ‘LOVE PROJECT’. புதிய திரைக்கதை, வித்தியாசமான காட்சியமைப்பு மற்றும் தரமான தொழில்நுட்பத்துடன் உருவாகும் இந்தப் படம் ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘LOVE PROJECT’ திரைப்படத்தின் First Look Motion Poster மற்றும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.





