
விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ், சித்தார்த் ஜாதவ்
இயக்கம்: கிஷோர் பாண்டுரங்
ஒளிப்பதிவு: கரண் பி ராவத்
இசை: ஏ ஆர் ரகுமான்
தயாரிப்பு: ராஜேஷ் கெஜ்ரிவால், குர்பால் சஜார்
மும்பையில் உடல் சரியில்லாத தாயையும் பார்த்துக் கொண்டு கடும் பண கஷ்டத்தில் தனது வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. வேலை கிடைக்காமல் அன்றாட பிழைப்பிற்கே தில்லாடுகிறார்.
அதே சமயம் மற்றொருபுறம் மிகப்பெரும் பணக்காரரான அரவிந்த்சாமி, தனது தொழில் நஷ்டத்தால் பெரும் சரிவை சந்திக்கிறார். அது மட்டும் இல்லாமல் விமான விபத்தில் தனது குடும்பத்தையும் அவர் இழந்து விடுகிறார். தொடர்ச்சியாக அடிமேல் அடி விழும் அரவிந்த்சாமிக்கு அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்.
வாழ்க்கையின் விளிம்பில் நின்று தவிக்கும் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை படத்தின் மீதி கதை
என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தெளிவாக செய்து முடித்து கொடுப்பவர் விஜய் சேதுபதி. இந்த படத்திலும் அதை அழகாக செய்து முடித்து இருக்கிறார். இந்த படம் முழுவதுமே வசனங்கள் இல்லாத படமாக உருவாகி இருப்பதால் தங்கள் நடிப்பின் மூலமாகவும் உடல் மொழியிலும் கண் அசைவிலும் காட்சிகளை கடத்த வேண்டிய சூழலில் அதை அழகாக செய்து முடித்திருக்கின்றனர்.
அரவிந்த்சாமியும் விஜய் சேதுபதியும் சில வருடங்களுக்கு முன்பு கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த பேசும் படம் படத்தில் மட்டுமே வசனங்கள் இல்லாத படமா உருவாகி மிகப்பெரும் வெற்றி பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது உருவாகி இருக்கும் இந்த காந்தி டாக்ஸ் திரைப்படமும் வசனங்கள் இல்லாமல் படம் உருவாகி இருக்கிறது.
ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு நேர்த்தியாக கடத்திச் சென்றிருக்கிறார் இயக்குனர்.
அரவிந்த்சாமி நடிப்பு சொல்லவே வேண்டியதில்லை. ஒரு பணக்கார வீட்டு பையனாகவும் ஒரு தொழிலதிபராகவும் தனது நடிப்பின் எதார்த்தத்தை வெளிப்படுத்தி நன்றாகவே காட்சிகளை கடத்திருக்கிறார். ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை படத்திற்கு பெரிதாகவே கை கொடுத்திருக்கிறது. கரண் பி ராவத் அவர்களின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறது.
பணம்தான் வாழ்க்கை என்று படம் முழுக்க கூறி இருந்தாலும் படத்தின் கிளைமாக்ஸில் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்ற ஒரு கருத்தையும் தெளிவாக விளக்கி எடுத்துச் சொன்ன இயக்குனர் கிஷோர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில்,
காந்தி டாக்ஸ் – காந்தி நோட்டு வழியில்





