கோலிசோடா முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் மில்டனின் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி வாகை சூடி கொடுத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகக்த்தை இயக்கியிருக்கிறார் விஜய் மில்டன். தனது தம்பி பரத் சீனியின் தயாரிப்பில் இப்படத்தை தயாரித்திருக்கிறார் விஜய் மில்டன்.
படத்தின் கதைக்கு சென்று விடலாம்…
படத்தின் கதைப்படி மூன்று ஹீரோக்கள், மூன்று ஹீரோயின்கள், மூன்று வில்லன்கள்.
முதல் நாயகன் பரத் சீனி, ஒரு ரெளடியிடம் வேலை பார்க்கும் போது தனது காதலி சுபிக்ஷாவின் வேண்டுகோளை ஏற்று, வேறு வேலைக்கு செல்ல நினைக்கிறார்..
இரண்டாவது நாயகன் இசக்கி பரத், ஹோட்டலில் வேலை பார்க்கிறார். இருந்தாலும் தான் ஒரு பேஸ்கட் ப்ளேயராக வேண்டும் என்பது கனவு. இவருடைய காதலி மதி.
மூன்றாவது நாயகன் ஆட்டோ சிவா. ரேகாவின் மகன். சொந்தமாக கார் வாங்கி கால் டாக்சி வைக்க வேண்டும் என்ற ஒருர் ஆசை உள்ளவர். இவருக்கும் ஒரு நாயகி இருக்கிறார்.
இவர்கள் மூவரும் தனிப்பட்ட ஒரு காரணத்திற்காக மூன்று ரெளடிகளின் பகையை தனித்தனியாக சம்பாதித்துக் கொள்கின்றனர்.
இடைவேளைக்குப் பிறகு மூன்று நாயகர்களும் இணைந்து, மூன்று ரெளடிகளை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஒன்லைன் என்று பார்த்தால் அது என்னவோ, கோலி சோடா படத்தின் முதல் பாகத்தின் கதை தான்… கதாபாத்திரங்கள் அனைத்தையும் தனித்தனியாக சொல்வதை விட, அனைத்து கேரக்டர்களும் ஓகே ரேஞ்ச் தான்
மூன்று ஹீரோக்களுக்கும் வில்லன்களை அவர்களுக்குள் திணிப்பது போன்ற ஒரு கட்டமைப்பு.. அது ஏனோ புரியவில்லை..
ஒரு பாடல்களை தவிர மற்ற பாடல்கள் ஏனோ எடுபடாத ஒன்றாக போய்விட்டது. பின்னனி இசை கதைக்கான பயணம். ஒளிப்பதிவு நச்.
சண்டைக்காட்சிகளில் வசனம் எட்டிப்பார்ப்பதால், சண்டைக்காட்சியை ரசிப்பதா, வசனத்தை ரசிப்பதா என்ற குழப்பத்திலேயே கதை நகர்கிறது.
சமுத்திரக்கனி, காலா படத்தில் தோன்றிய அதே குடிகார கெட்-அப் தான்., அதே அட்வைஸ், சப்போர்ட் கேரக்டர் கதாபாத்திரம் தான்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்ததாலும், கதையோடு கதாபாத்திரங்கள் பயணித்ததாலும் கோலிசோடா மக்களிடையே வரவேற்பை பெற்றது. கோலிசோடா 2 அந்த அளவிற்கு எடுபடாமல் போனதே உண்மை. முதல் பாகத்தில் இருந்து இரண்டாம் பாகம் விலகிதான் நிற்கிறது.
கோலிசோடா 2 – எதிர்பார்ப்பும் அதிகம் ஏமாற்றமும் அதிகம்…
Facebook Comments