Spotlightசினிமா

வடசென்னை: ஜுலையில் ட்ரெய்லர், செப்டம்பரில் படம்… வேகம் எடுக்கும் தனுஷ்!

நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் ‘வட சென்னை’. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் பிறகு முதல் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாகத்தின் ட்ரைலர் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதன் பிறகு இந்த படத்தின் முதல் பாகத்தினை செப்டம்பர் மாதத்தில் வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.

சென்னையில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார்.தனுஷ்- வெற்றிமாறன் இந்த கூட்டணி பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது.

இந்த கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. இது தவிர இந்த படத்தினை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button