Spotlightசினிமா

இறுதிக்கட்டத்தை எட்டிய ‘குட் நியூஸ்’! டப்பிங் பணிகளைத் தொடங்கிய அஷ்வின்!

மூவிட்ரான் புரொடக்‌ஷன் தயாரிப்பில், ஜெயராம் – அஷ்வின் இணைந்து நடிக்கும் ‘குட் நியூஸ்’ (Good News) திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நவம்பர் 11-ம் தேதி சென்னையில் உள்ள டி ஸ்டுடியோவில் பாரம்பரிய பூஜையுடன் தொடங்கின.

சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், சாய் பிரபு ஜெயக்குமார் இணைத் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்குகிறார். பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இப்படத்திற்கு வசனங்கள் எழுதியுள்ளார்.

டப்பிங் பணிகளின் முதல் கட்டமாக நடிகர் அஷ்வின் தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங்கைத் தொடங்கினார். இந்நிகழ்வில் இணைத் தயாரிப்பாளர் சாய் பிரபு ஜெயக்குமார் மற்றும் இயக்குநர் நாகேந்திர முருகன் கலந்துகொண்டனர்.

குடும்ப உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் கல்யாணி அனில் கதாநாயகியாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். ஆஷா சரத், முத்துக்குமார், ஜாஃபர், வினோதினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சித்துக்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அர்ஜுன் பாபு படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button