
ப்ரியா – ராஜ் திருமணம் நவம்பர் 11-ம் தேதி குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் நடைபெற்றது.
தனது திருமணம் குறித்த மகிழ்ச்சியான செய்தியை ப்ரியா சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எனக்கும் ராஜ்-க்கும் இனிதே திருமணம் நடைபெற்றது. இத்தனை ஆண்டுகளாக எனது பயணத்தில் அன்பும் ஆதரவும் அளித்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
நெருங்கியவர்கள் சூழ சிறிய நிகழ்வாகத் திருமணத்தைக் கொண்டாடியதால் அனைவரையும் நேரில் அழைக்க இயலவில்லை. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் விரும்புகிறோம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது வாழ்க்கைப் பயணத்தில் துணையாக இருந்த ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ப்ரியா, புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ள தங்களுக்குத் தொடர்ந்து அன்பும் ஆசீர்வாதமும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.





