Spotlightசினிமா

சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் “ரூல் நம்பர் 4”!

பாஸர் இயக்கத்தில் பிரதீப் கிருஷ்ணா நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் ”ரூல் நம்பர் 4”.

இப்படம், கடந்த வெள்ளியன்று வெளியானது. குறைந்த திரையரங்குகள் மட்டுமே கிடைத்தாலும், திரையிட்ட இடங்களில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

”படத்தின் 70 சதவீத படப்பிடிப்பை காட்டுப் பகுதியில் தான் படமாக்கியிருக்கிறோம். இந்த கதை தமிழ் சினிமாவில் புதியதுதான். ஒவ்வொரு காட்சியும் பரபரப்பாகவே நகரும்படியாக படத்தினை உருவாக்கியிருக்கிறோம். படம் பார்த்த அனைவரும் பாராட்டுகிறார்கள். படத்திற்காக சப்போர்ட் செய்த அனைவருக்கும் நன்றி” என்று படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான பிரதீப் கிருஷ்ணா கூறியுள்ளார்.

தீபாவளி தினத்தை முன்னிட்டு வரும் வெள்ளியன்று பெரிய பட்ஜெட் படங்கள் இறங்கவிருக்கும் நிலையில், வர இருக்கும் நான்கு நாட்களிலும் “ரூல் நம்பர் 4” திரைப்படம் வெகுஜன மக்களை வெகுவாக சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல சினிமாக்களை ”கோலிவுட்” என்றும் கைவிட்டதில்லை என்ற பெருமை தமிழ் சினிமாவிற்கு என்றும் உள்ளதே!

Facebook Comments

Related Articles

Back to top button