Spotlightசினிமா

கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் ”D55”

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், தங்களது ஏழாவது திரைப்படத்தை அறிவிப்பதில், பெருமை கொள்கிறது. GN அன்புசெழியன் வழங்கும் #D55 திரைப்படத்தில், தேசியவிருது நாயகன் தனுஷ் நடிக்கின்றார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம், ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக இருக்கும்.

தனது “ராயன்” திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் #D55 இல் களமிறங்குகிறார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, திரைக்கதை, இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான “அமரன்” படம் அனைவரது பாராட்டுக்களைக் குவித்து, பெரு வெற்றி பெற்றுள்ளது. அதே போல #D55 படத்திலும் தனது தனித்துவமான கதை மூலம், ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார்.

#D55 படத்தின் தயாரிப்பாளர் சுஸ்மிதா அன்புசெழியன் கூறுகையில்.., “தனுஷ் சார் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். “அற்புதமான திறமைமிக்க, இந்த இருவரின் கூட்டணியில், இப்படம் ஒரு தலைசிறந்த படைப்பாக இருக்கும்” என்றார்

Facebook Comments

Related Articles

Back to top button