![](https://tamilveedhi.com/wp-content/uploads/2019/07/178958-gorilla.jpg)
திருட்டு தொழிலை கைவசம் வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தி வருபவர் நடிகர் ஜீவா. இவருக்கு இரண்டு நண்பர்கள் சதீஷ் மற்றும் விவேக் பிரசன்னா. இவர்களோடு சேர்ந்து சிப்பென்சி குரங்கு ஒன்றும் உள்ளது. ஜீவா அந்த சிப்பென்சி குரங்கை உயிருக்கு மேலாக வளர்த்து வருகிறார்.
இவர்கள் தங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆக பணம் தேவைப்படுகிறது. அந்த பணத்தை ஒரு வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். இவர்களோடு சேர்ந்து அந்த வங்கி கொள்ளையில் நான்காவதாக ஒருவரும் சேர்கிறார் அவர்தான் மதன்குமார். இவர் ஒரு விவசாயி.
நால்வரும் இணைந்து அந்த வங்கிக்குள் சென்று பணத்தை கொள்ளையடிக்கின்றனர். பணத்தை கொள்ளையடித்து வெளியே வரும்போது இவர்களை போலீஸார் சுற்றி வளைக்கின்றனர். இதனால் நால்வரும் வங்கியிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது. அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் நாயகன் ஜீவா, வழக்கம்போல் தனது எதார்த்த நடிப்பை அதிகமாக இல்லாமல் மிதமாக கொடுத்திருக்கிறார். இன்னும் சற்று மெனக்கெடல் ஜீவாவிடம் இருந்து அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்திற்கும் கச்சிதமான நாயகன் ஜீவா என்றாலும், ஏன் அதை வெளிப்படுத்த யோசிக்கிறார் என்று தெரியவில்லை.
நாயகி ஷாலினி பாண்டே அழகாக இருக்கிறார். இரண்டு பாடல்களுக்கு வந்து செல்கிறார். தமிழ் சினிமாவில் வழக்கம்போல் வரும் ஒரு நாயகியின் கதாபாத்திரம் தான் அவர்களுக்கு
சதீஷின் மற்றும் விவேக் பிரசன்னாவின் காமெடி என்ற பெயரில் செய்யும் அலப்பறைகள் திரையரங்கை விட்டு எழுந்து ஓடி விடலாமா என்று தான் தோன்றுகிறது. இரட்டை வர்த்த வசனங்களால் தலைவலியைத் தான் கொடுக்கிறார்கள்.
இரண்டாம் பாதியில் எண்ட்ரீயாகும் யோகிபாபு தான் நமக்கு சற்று ஆறுதல். அவரின் காமெடிகள் ஆங்காங்கே நமக்கு சற்று ஆறுதல் தருகிறது.
சாம் சி எஸ்-சின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் தான் என்றாலும், பின்னனி இசை மிரட்டல். குருதேவ்வின் ஒளிப்பதிவு கலர்புல். முதல் பாதி எழுந்து ஓடிவிடும் அளவிற்கு சோதனை கொடுத்தாலும், இரண்டாம் பாதி சற்று ஆறுதல் அளித்திருக்கிறது இந்த ‘கொரில்லா’.
இரண்டாம் பாதியில் வைத்திருக்கும் விவசாய பிரச்சனை தீர்வு காட்சிகள் .. இயக்குனருக்காக எழுந்து நின்று கைதட்டலாம்….
ஆமா… படத்துல அந்த சிப்பென்சி குரங்குதான் எதுக்குன்னு தெரியல..
கொரில்லா – முதல் பாதி சோதனை.. இரண்டாம் பாதி ஆறுதல்…