பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இது ஆறாவது சீசனாக தொடர்ந்து வருகிறது.
இந்த சீசனிலும் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். உலக நாயகன் கமல்ஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
நேற்று புதிய என்டரியாக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளார். இப்படியான நிலையில் நேற்று ஜிபி முத்து அவர்களுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட ரக்ஷிதா அவருக்கு மாத்திரை கொடுத்தார். மேலும் அடுத்ததாக மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக ஜிபி முத்துவால் மற்ற போட்டியாளர்களுக்கும் உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த தகவலால் ஜிபி முத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டால் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக கூறி வருகின்றனர்.