
நடிகர்கள்: வடிவுக்கரசி, திலீபன், சிங்கம்புலி, கஜராஜ், ஆனந்த் நாக், அபர்ணா, மாஸ்டர் ஞானஷ்யாம், பாப்வ் சாண்ட்ரியா
தயாரிப்பு: விஜய் மேரி யூனிவர்சல் மீடியா
தயாரிப்பாளர்: விஜயமேரி
எழுத்து & இயக்கம்: விஜய குமரன்
ஒளிப்பதிவு: ஏ மணிகண்டன்
இசையமைப்பாளர்: டாக்டர் செல்லையா பாண்டியன்
படத்தொகுப்பு: எம் எஸ் கோபி
கதைப்படி,
தமிழக கேரள எல்லை பகுதி தான் படத்தின் கதைக்களம். அங்கு ஒரு கிராமத்தில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்க போலீஸ் அதிகாரி திலீபன் அங்கு வருகிறார். அவருக்கு கிடைக்கும் தகவலை எடுத்துக் கொண்டு இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
இந்த சூழலில் லண்டனில் இருந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பூர்வீக வீட்டில் ஆனந்தநாக் குடியேறுகிறார். அந்த வீட்டை சரி செய்யும் வேலையில் இருந்து கொண்டிருந்தபோது வீட்டிற்கு முன் ஒரு மூதாட்டி மயங்கி கிடக்கிறார். அவரை அழைத்து வந்து வீட்டிற்குள் வைத்து அவருக்கு உதவி செய்கிறார் ஆனந்த் நாக்.

அந்த சமயத்தில் அந்த மூதாட்டியை பார்க்கும் ஊர் தலைவர் அவரைப்போலவே இருக்கும் ஒரு மூதாட்டி பற்றி ஒரு பயங்கரமான கதை ஒன்றை சொல்கிறார். இதில் எந்த நாட்டமும் இல்லாத ஆனந் நாக் அதனை உதாசீனப்படுத்துகிறார்.
இதை சற்று சீரியஸாக எடுத்துக் கொண்டு மூதாட்டினை பற்றிய தகவலை சேகரிக்கிறார் ஆனந்த் நாக் அவர்களின் மனைவி அபர்ணா. அவரைப் பற்றிய உண்மை தெரிய வர தெரியவர அதிர்ச்சியில் உறைகிறார் அபர்ணா.
மூதாட்டினை பற்றி அறிந்து கொண்ட திலீபனும் அந்த வீட்டிற்கு வருகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
இதில் மூதாட்டியாக சிறப்பான ஒப்பனையோடு நடித்து அனைவரையும் மிரட்டி இருக்கிறார் வடிவுக்கரசி. ஒட்டுமொத்த படமும் இவரை சுற்றியே நகர்வதால் படத்தின் கருவை சரியாக புரிந்து கொண்டு நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சற்று அவர் மீது இரக்கம் வர வைத்தாலும் கூட, போகப் போக அவரைக் கண்டாலே பயம் தொற்றிக் கொள்ளும் அளவிற்கு மிகவும் நேர்த்தியான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார் வடிவுக்கரசி.

பல இடங்களில் தனது அனுபவத்தையும் இப்படத்தில் கொண்டு வந்து அந்தக் கதாபாத்திரமாகவே மாறி நம்மளை அசர வைத்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடித்த திலீபன், போலீஸ் கான்ஸ்டபிளாக வந்த சிங்கம் புலி, ஊர் தலைவராக வந்த கஜராஜ், மேலும் ஆனந்த் நாக், அபர்ணா மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் என அனைவரும் தங்களது வேலையை மிகவும் சரியாக செய்திருக்கின்றனர்.
இயக்குனர் இவர்களிடமிருந்து தரமான ஒரு நடிப்பை வாங்கி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஒளிப்பதிவாளர் ஏ மணிகண்டனின் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளை மிகவும் கச்சிதமாக படம் பிடித்திருக்கிறது.
இசையமைப்பாளர் டாக்டர் செல்லையா பாண்டியன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் மிரட்டலாக இருந்தது. கதைக்கு ஏற்ற இசையையும் அவர் கொடுத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

பல வருடங்களுக்கு முன்பு குழந்தைகளை தூங்க வைக்க வேண்டும் என்றால் அல்லது ஏதாவது கதை சொல்ல வேண்டும் என்றால் ஒரு பழைய கிராமத்தில் ஒரு அடர்ந்த பங்களா அதில் ஒரு பாட்டி என்றுதான் கதை சொல்ல ஆரம்பிப்பார்கள். அந்த கதை சொல்லியாக இந்த படம் நிச்சயம் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கும்.
கதையும் கதாபாத்திரத்தையும் மிகவும் நேர்த்தியாக வடிவமைத்து அதனை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் விஜயகுமாரன். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் படமாக இந்திராணி இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.





