Spotlightசினிமாவிமர்சனங்கள்

கார்டியன் – விமர்சனம் 2.5/5

இயக்குனர்கள் குருசரவணன் மற்றும் சபரி இவர்களின் இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி, பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ ராஜேந்திரன், அபிஷேக் வினோத், ‘டைகர் கார்டன்’ தங்கதுரை, ஷோபனா பிரனேஷ், தியா(அறிமுகம்), ‘பேபி’ க்ரிஷிதா(அறிமுகம்) உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் கார்டியன்.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் K.A சக்திவேல். இசையமைத்திருக்கிறார் சாம் சி எஸ்.

கதைக்குள் சென்று விடலாம்…

சிறுவயதில் இருந்தே எதை செய்தாலும் அது தவறாகவே முடிவதால், தான் ஒரு அன்-லக்கி என்று நினைத்துக் கொள்கிறார் நாயகி ஹன்சிகா. இந்த சமயத்தில், ஒரு கல் மீது, ஹன்சிகாவின் இரத்தம் விழுந்து, அது சற்று உயிர்ப்பிக்கிறது.

அந்த கல் மூலமாக, ஹன்சிகாவிற்கு தொடர்ந்து நல்லதே நடந்து வருகிறது. கிடைக்காத வேலை கிடைக்கிறது. வேலையில் தொல்லை கொடுக்கும் ஓனர் இறக்கிறார் என தொடர்ந்து நடக்கிறது.

இந்த சமயத்தில், ஹன்சிகாவிற்கு நல்லது நடக்கும் அதே நேரத்தில் மற்றொரு பக்கம் வேறு ஒருவருக்கு தீங்கும் நடக்கிறது.

இதனை அறிந்து மருத்துவர் ஒருவரை தொடர்பு கொண்டு கலந்தாலோசிக்கிறார் ஹன்சிகா. இதைக் கேட்டு அதிர்ச்சியாகிறார்.

அதன்பிறகு, ஒரு அமானுஷ்யம் தன்னை சுற்றி வருவதை கண்டறிந்து கொள்கிறார் ஹன்சிகா.

நான்கு பேரை கொலை செய்யவிருப்பதாகவும் அந்த அமானுஷ்யம் ஹன்சிகாவிடம் கூறுகிறார்.இதனால் அதிர்ச்சியடைகிறார்.

யார் அந்த அமானுஷ்யம்.? எதற்காக நால்வரை கொலை செய்ய நினைக்கிறார்.?? என்பது படத்தின் மீதிக் கதை.

படத்தின் மொத்த கதையை தனி ஒரு ஆளாக தாங்கி செல்கிறார் நாயகி ஹன்சிகா. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங் கொடுத்து காட்சிகளை சோர்வடைய வைத்திருக்கிறார் ஹன்சிகா. சீனியர் நடிகை என்பதாலோ என்னவோ, இயக்குனர் பெரிதாக நடிப்பை கேட்டு வாங்க இயலவில்லை போல் தெரிகிறது.

தொடர்ந்து, பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி உள்ளிட்ட நட்ச்த்திரங்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்திருக்கிறார்கள்.

தங்கதுரை மற்றும் மொட்டை ராஜேந்திரன் இருவரின் காமெடி காட்சிகள் எந்த இடத்திலும் பலனளிக்கவில்லை.

கதை ஆங்காங்கே தொங்கிக் கொண்டே சென்றது படம் பார்ப்பவர்களை சலிப்படைய வைத்திருக்கிறது.

வழக்கமான பேய் கதை தான் என்பதால், கதை பெரிதாக நமக்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

சாம் சி எஸ் இசையில் பின்னணி இசையில் அதிர வைப்பதாக கூறி, ஒரே டியூனை படம் முழுக்க போட்டு தள்ளியிருக்கிறார்.

ஆங்காங்கே ஒரு சில பேய் காட்சிகள் சற்று பயமுறுத்துகின்றன. படத்தின் ஆரம்பத்தில் வந்த காட்சி மிரள வைத்தது.

ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

கார்டியன் – மிரட்டல் காணாது…

Facebook Comments

Related Articles

Back to top button