Spotlightசினிமா

வெற்றிமாறன் இயக்கும் சூர்யா 40 படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் ஏப்ரல் கோடை விடுமுறையில் ரிலீசாகிறது. இதன் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்பட டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இது அவரின் 40வது படமாகும்.

இந்த நிலையில், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 75வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

GV Prakash to compose music for Suriya Vetrimaaran film

Facebook Comments

Related Articles

Back to top button