Spotlightசினிமா

பொன்னியின் செல்வன் டைட்டில் லுக்கை வெளியிட்ட மணிரத்னம்

கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் என்ற காவியத்தை திரைப்படமாக்கி வருகிறார் மணிரத்னம்.

இந்த காவியம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமாகிறது.

இதில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், ஜெயராம், லால், ஐஸ்வர்யாராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார், நடிகர் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

கிட்டதட்ட ரூ. 700 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் சூட்டிங் தாய்லாந்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது கார்த்தி, ஜெயம் ரவி நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் மணிரத்னம்.

லைகா நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்துக்கான கதையை மணிரத்னமும், குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுத ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார்.

ரவி வர்மன் ஒளிப்பதிவு பணியையும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும் கவனிக்க ஷாம் கௌசல் சண்டைப் பயிற்சி இயக்குநராக பணிபுரிகிறார்.

Maniratnam revealed Ponniyin Selvan Title look and Crew details

Facebook Comments

Related Articles

Back to top button