
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி நடிக்க உருவாகியுள்ளது “NGK”. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் டீசரை காதலர் தினம் அன்று மாலை 6 மணியளவில் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.
மேலும், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “தேவ்” காதலர் தினத்தில் வெளியாக இருப்பதால் அப்படத்தின் இடைவேளையில் டீசரை ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், திரையரங்கு ஒன்றில் சோதனை மார்க்கமாக ஒளிபரப்பட்ட படத்தின் டீசரை மர்ம நபர் ஒருவர் தனது கைப்பேசியில் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டார். இது சிறிது நேரத்தில் வைரலானது. இது சூர்யா ரசிகர்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருந்தாலும் HD தரத்தில் 2K தொழில்நுட்பத்தில் டீசர் மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தெரிவித்துள்ளார்.





