காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
அதில், “காவிரி மேலாண்மைக்கு நாம் போராடும் போது, இந்த கோரிக்கையை முன்னிறுத்துவோம். காவிரி மற்றும் டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
பெட்ரோல் எடுக்கும் பகுதிகளை பாதுகாக்கும் நாம் ஏன் உண்ணும் உணவிற்காக விவசாயத்திற்கு அதை செய்யக்கூடாது⁉. அப்படி அறிவிக்கும் பட்சத்தில் காவேரி டெல்டா பகுதிகளில் மணல் கொள்ளை, ஹைட்ரோ கார்பன், ஆலை விதிமீறல்கள் போன்ற எதையும் செய்ய முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Facebook Comments