
தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் டீசர் நேற்று வெளியானது. தோனி மனைவி சாக்ஷியின் தோனி என்டெர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் முதல் படம் L.G.M.
டீசரை பார்க்கும் போது கலகலப்பான எண்டர்டெயின்மெண்ட்க்கு பஞ்சம் இருக்காது என்றே தோன்றுகிறது. நிகழ்கால கிட்ஸ்’களை நிச்சயம் இப்படம் கவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..
விஷ்வஜித்தின் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவும் ரமேஷ் தமிழ் மணியின் பின்னணி இசையும் படத்தின் டீசரை ரசிக்க வைத்திருக்கிறது.
இப்படம் கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தோனி என்டெர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு. ரமேஷ் தமிழ்மணி படத்தினை இயக்கியிருக்கிறார்.
படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு மற்றும் மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை விகாஸ் ஹசிஜா தயாரிக்க பிரியான்ஷு சோப்ரா இதன் கிரியேடிவ் தயாரிப்பாளராக உள்ளார். தோனி என்டெர்டெய்ன்மென்ட் இந்தப் படத்தை வழங்குகிறது.