Spotlightவிமர்சனங்கள்

சச்சின் (ரீ ரிலீஸ்) – திரை விமர்சனம்

ஜான் மகேந்திரன் இயக்கத்தில் சுமார் 20 வருடங்களுக்கு முன் இயக்கி வெளிவந்த திரைப்படம் தான் சச்சின். மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்றாலும், அந்நேரத்தில் சரிவர ஓடாத காரணத்தால் மீண்டும் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார் இதன் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு.

இப்படத்தில், விஜய், ஜெனிலியா, வடிவேலு, சந்தானம், தாடி பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜீவா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

கதைக்குள் சென்று விடலாம்…

ஊட்டியில் இருக்கும் கல்லூரிக்கு படிப்பிற்காக வந்து சேர்கிறார் விஜய். அந்த கல்லூரியில் ஜெனிலியாவும் படித்து வருகிறார்.

இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ள, நண்பர்களாகின்றனர். ஒரு கட்டத்தில் ஜெனிலியா மீது காதல் வயப்பட்டு, தனது காதலை விஜய் ஜெனிலியாவிடம் கூறுகிறார்.

அந்த காதலை ஏற்க மறுக்கிறார் ஜெனிலியா. ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இரண்டு பேருக்கும் பிடித்து வருவது தான் காதல் என்ற பிடிவாதத்தில் இருக்கிறார் ஜெனிலியா.

விஜய்யின் காதலை ஜெனிலியா புரிந்து கொண்டாரா ஏற்றுக் கொண்டாரா என்பதே படத்தின் மீதிக் கதை.

விஜய் – வடிவேலு கூட்டணியில் உருவாகி வெளிவந்த இப்படம் காமெடிக்கு பெயர் போன திரைப்படம் தான். ஊட்டி என்பதாலோ என்னவோ போகிற இடங்களிலெல்லாம் புகையை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கொஞ்சம் குறைத்திருக்கலாம்

வழக்கம் போல் விஜய் தனது வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். ஜெனிலியாவும் குறை வைக்கவில்லை.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் சூப்பர் ரகம் தான்.

சாலை தண்ணீரில் நடக்கும் சண்டைக் காட்சியை இன்னும் பெட்டராக செய்திருக்கலாம். பார்க்கும் போது சிரிப்பு தான் வந்தது. நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

Facebook Comments

Related Articles

Back to top button