
அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர், சதீஷ், நாசர், முனீஸ்காந்த் நடிப்பில் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “ஹாஸ்டல்”. ட்ரைடர்ண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.
கதைப்படி,
கல்லூரி ஹாஸ்டலில் தங்கியிருக்கின்றனர் நண்பர்களான அசோக் செல்வன், சதீஷ், KPY யோகி உள்ளிட்டோர். இந்த ஹாஸ்டலுக்கு வார்டனாக இருக்கிறார் முனீஸ்காந்த். ஹாஸ்டலின் பொறுப்பாளராக இருக்கிறார் பாதராக வரக்கூடிய நாசர்.
நாயகி ப்ரியா பவானி சங்கர், அசோக் செல்வனிடம் ஒருநாள் இரவு மட்டும் பாய்ஸ் ஹாஸ்டலில் தன்னை தங்க வைத்தால் 50ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக கூறுகிறார். இதனை ஏற்றுக் கொண்ட அசோக் செல்வன், ப்ரியாவை ஹாஸ்டலுக்கு அழைத்துச் செல்கிறார்.
அதன்பிறகு அந்த ஹாஸ்டலுக்குள் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் அசோக் செல்வன், தனது மன்மதலீலை நடிப்பை இப்படத்திலும் காட்டியுள்ளார். தனது நண்பர்களுடன் சேர்ந்து குறும்புத்தனம் செய்யும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். சதீஷ் தனது வழக்கமான காமெடியை கொடுத்திருக்கிறார். தனக்குத் தானே காமெடி என்ற பெயரில் கூறிக் கொள்ளும் ஒரு சில காட்சிகளை சதீஷ் தவிர்ப்பது நல்லது.
KPY புகழ் யோகிக்கு இப்படத்தில் நல்ல ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு, அதையும் ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களிலும் இதே லிமிட்டட் காமெடியை கொடுத்தால் இன்னும் வளரும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. வாழ்த்துகள் யோகி.
சீனியர் நடிகரான நாசர், தனது போர்ஷனை சிறப்பாக செய்திருந்தாலும், தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதை கொச்சைப் படுத்தும் ஒரு சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம். அதேபோல், மதத்தை கொச்சைப்படுத்தும் காட்சிகள் பலவற்றை இயக்குனர் தவிர்த்திருக்கலாம். அறந்தாங்கி நிஷா அடிக்கும் அரட்டைகள் முதலில் ரசிக்க வைத்தாலும், போதும்பா முடிங்க சீக்கிரம் என்று சொல்லும் அளவிற்கு வந்து நிறுத்தி விட்டார்கள்.
முனீஷ்காந்தின் காமெடி காட்சிகள் ரசிக்க வைத்திருக்கின்றன. ரவிமரியாவின் காட்சிகள் ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்துள்ளன.
பல இடங்களில் டபுள் மீனிங்க் டயலாக்குகள் எட்டிப் பார்க்கின்றன. 18+ பார்க்கும் படமாக தான் இது அமைந்துள்ளது. மதத்தை சார்ந்து, அதை அவமானப்படுத்தும் காட்சிகள் பலவற்றை இயக்குனர் இன்னும் கவனமாக கையாண்டிருக்கலாம்.
பின்னனி இசை மிரட்டலாக கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். பாடலும் ஆட்டம் போட வைத்துள்ளன.அறந்தாங்கி நிஷாவிற்கு வரும் பின்னனி இசை செம. அதேபோல், ஒளிப்பதிவையும் பாராட்டியே ஆக வேண்டும்.
பசங்க 2 மணி நேரம் ஜாலியா ஒரு படம் பார்க்கனும்னு ஆசைபட்டா ஒரு தடவை தியேட்டர்க்கு சென்று பார்த்து ரசிங்க.
ஒளிப்பதிவு – ப்ரவீன் குமார்
இசை – பாபோ ஷாஷி





