
தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் பெண் ஊழியர் ஒருவரை விஷப்பாம்பு கடித்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகம் முழுதும் புதர் மண்டிக் கிடப்பதால் பாம்புகள் அதிகரித்துள்ளன. இதனால் ஊழியர்கள் மட்டுமன்றி கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை பிரசவித்த பெண்கள் மற்றும் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நூற்றுக்கணக்கானோர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவுவதாகவும் ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனை ஊழியர் செல்வி ஒரு கட்டிடத்தில் வெளியே செல்லும்போது அந்த வழியாக வந்த பாம்பு அவரை கடித்தது. இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொடிய நச்சுத்தன்மையுள்ள 5 கட்டுவீரியன்கள் உட்பட 10 பாம்புகளை மருத்துவமனையை சுற்றி பிடித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன் எழுந்த ஜோதிகா பேசியது, இந்த மருத்துவமனையை குறித்து தான் என்பது குறிப்பிடத்தக்கது.