
இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், யோகிபாபு, ராதாரவி நடிப்பில் உருவாகியுள்ளது ‘கொரில்லா’. மேலும் , இப்படத்தில் சிம்பம்ன்ஸி குரங்கு ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது.
இதுவரை 12 லட்சம் ரசிகர்களால் இந்த படத்தின் ட்ரெய்லர் பார்க்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் 2 நிமிட முன்னோட்ட காட்சிகளும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தினை தமிழகம் முழுவதும் கான்செப்ட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஜுன் 21 முதல் இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது.
Facebook Comments