Spotlightவிளையாட்டு

தவான் அதிரடியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!

2019 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிக் கொண்டன.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்களை எடுத்து இமாலய இலக்கை ஆஸ்திரேலிய அணிக்கு வைத்தது.

இதில் தவான் 117 ரன்களும், கோலி 82 ரன்களும், ரோஹித் ஷர்மா 57 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து, 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து இறுதியாக 50 ஓவர்களில் 316 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் – தவான்

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close