Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

பசியால் நேர்ந்த கொடுமை; அழுகிய பழங்களை சாப்பிட்ட தொழிலாளர்கள்.. கலங்க வைத்த வீடியோ!

கொரோனாவால் நாடு முழுவதும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்தியாவில் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அன்றாட வாழ்க்கையை வாழ முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த கட்டுப்பாட்டால் அன்றாட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களில் தங்கி வேலை பார்த்து வந்த தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது.

இந்நிலையில் டெல்லி யமுனை நதி அருகே உள்ள நிகோம்போத் என்ற இடத்தில் அழுகிய வாழைப்பழங்கள் கொட்டப்பட்டுள்ளன. ஊரடங்கால் வேலை இல்லாமல் தவித்து வரும் தொழிலாளர்கள் பசியில் அழுகிய வாழைப்பழங்களில் இருந்து சிலவற்றை எடுத்து சாப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button