Spotlightதமிழ்நாடு

சீக்கிரமாகவே ”இந்தியன் 2”… கமல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த உதயநிதி!

லக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிய படம் தான் “இந்தியன்”. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க களமிறங்கியது லைகா நிறுவனம்.

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்தது “இந்தியன் 2”. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, கட்சிப் பணிக்காக சென்று விட்டார் கமல்ஹாசன். இதனால் கோபமடைந்த இயக்குனர் ஷங்கர், வேறு ஒரு படத்தை இயக்க சென்று விட்டார்.

தொடர்ந்து பல பிரச்சனைகளை சந்தித்த இந்தியன் 2, அப்படியே நின்று விட்டது. அதன்பிறகு ஆரம்பிக்கப்பட்ட விக்ரம், வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

டான் படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், லைகா நிறுவனர் சுபாஷ்கரன், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், முத்து குமரன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,நானும் லைகா சுபாஷ்கரனும் இணைந்து விரைவில் இந்தியன் 2 படத்தின் வேலைகளை துவங்க இருக்கிறோம் என்ற செய்தியை கூறினார்.

இதனால், கமல்ஹாசன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். விக்ரம் கொடுத்த வெற்றியை கொண்டாடி வரும் அவரது ரசிகர்கள், இச்செய்தி மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button