Spotlightசினிமாவிமர்சனங்கள்

இன்பினிட்டி – விமர்சனம் 2.5/5

றிமுக இயக்குனர் சாய் கார்த்திக் இயக்கத்தில் நட்டி, வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகி நாளை வெளிவர இருக்கும் திரைப்படம் தான் “இன்பினிட்டி”.
இன்பினிட்டி என்றால் முடிவிலி என்ற அர்த்தம் உண்டு.

நாயகனான நட்டி ஒரு சிபிஐ அதிகாரி. சென்னையில் அடுத்தடுத்த நடந்த மூன்று கொலைகளை விசாரிக்க வருகிறார் நட்டி.

அப்போது, ஒரு இளம்பெண் ஒருவர் காணாமல் போனதையும், அவர் எரித்துக் கொள்ளப்பட்டிருக்கிறார் என்பதையும் கண்டுபிடிக்கிறார் நட்டி.

பெண் கொல்லப்பட்டதற்கும் மூன்று நபர்கள் கொல்லப்பட்டதற்கும் சம்மந்தம் இருக்கிறதா என்ற கோணத்தில் தனது விசாரணையை துவங்குகிறார் நட்டி.

இறுதியில் யார் இந்த கொலைகளை செய்தது.? எதற்காக செய்தார்.?? என்பதே படத்தின் மீதிக் கதை.


எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்கான மெனக்கெடலை நன்றாகவே கொடுக்கக்கூடியவர் நடிகர் நட்டி. இந்த படத்திலும் அந்த மெனக்கெடலை நன்றாகவே கொடுத்திருக்கிறார். காட்சிக்கு காட்சி புதுவிதமான எனர்ஜியோடு நடித்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்துவரும் வித்யார் பிரதீப்பிற்கு இப்படத்தில் சற்று மாறுபட்ட கதாபாத்திரம் தான். க்ளைமாக்ஸ் காட்சியில் நடிப்பு சற்று காமெடியாக இருந்தாலும்.. சரி ஒகே என்று ஏற்றுக் கொள்ளலாம் இவரது நடிப்பை..

மூன்று கொலைகளை செய்ததும் நட்டியிடம் வந்து தானாக வந்து சரணடைகிறார் வில்லன். ஆனால், மூன்று கொலைகளை செய்து முடித்த போது நட்டியையே கொல்ல வருகிறார். இது என்ன மாதிரியான லாஜிக்.

பல கொலைகளை செய்து விட்டு, நான் திருந்திவிட்டேன் என்று போர்வை போற்றுக்கொள்கிறார் வில்லன். அந்த சிறுமியை கொல்வதற்கு முன் திருந்தியிருந்தால் கூட ஓகே.. ஆனால், ??

ஆக, கொலைகாரனின் நோக்கம் தான் என்ன..? என்ற கேள்வியை எழுப்பி விடுகிறார்கள்.

பல ஓட்டைகளை அடைக்க இயக்குனர் மறந்துவிட்டார். இயக்குனர் கையில் எடுத்தது என்னவோ அழுத்தமான கதைதான். ஆனால், அதை திரைக்கதையாக கொண்டு செல்லும்போது சற்று தடுமாறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

முதல் பாகத்திலே ஆயிரத்தெட்டு குழப்பங்கள் வைத்துக் கொண்டு, இரண்டாம் பாகம் ஏன்.?

Facebook Comments

Related Articles

Back to top button