ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரின் 43-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து சி.எஸ்.கே அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன் – ராயுடு இணை களமிறங்கியது. ஷேன் வாட்சன் நிதானமாக ஆட, ராயுடு 12 ரன்கள் , ஷேன் வாட்சன் 39,சுரேஷ் ரெய்னா 52, சாம் பில்லிங்ஸ் 27, தோனி 33 எடுத்திருந்தனர். இறுதியில் சி.எஸ்.கே அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்யக் களமிறங்கியது. அந்த அணியின் ஜாஸ் பட்லர் சி.எஸ்.கே அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். அவரது அபாரமான ஆட்டம் சென்னை அணியின் தோல்வியை உறுதி செய்தது. ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.