
இந்திய வருவாய் பணி (IRS) அதிகாரி தோ. சமய முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ திரைப்படம், சுங்கத்துறை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்ட அதிரடி கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது.
ஜே.டி. சக்கரவர்த்தி, லால், சரண் சக்தி, பால சரவணன், ஸ்மேஹா, ராதிகா சரத்குமார், காளி வெங்கட், ஜாஃபர் சாதிக், மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், போதைப்பொருள் கடத்தல், நிழல் உலகம் மற்றும் சுங்கத்துறையின் துணிச்சலான நடவடிக்கைகளை விறுவிறுப்பாக சித்தரிக்கிறது. எஸ்.ஆர். ட்ரீம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படம், அதிரடி, சஸ்பென்ஸ் மற்றும் யதார்த்தம் கலந்த கிரைம் திரில்லராக உருவாகி வருகிறது.
Facebook Comments





