Spotlightசினிமா

மர்டர் மிஸ்ட்ரி திரில்லராக உருவாகும் ‘மாறுவேஷம்’… வைபவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஒனிரோமான்சி பிக்சர்ஸ் மற்றும் மங்கி மேன் கம்பெனி இணைந்து தயாரிக்கும் ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வைபவ் காவல்துறை அதிகாரி திலக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த மர்டர் மிஸ்ட்ரி திரில்லரை ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார்.

வியானா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ராம்கி, முனிஷ்காந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எதிர்பாராத திருப்பங்கள், மர்மங்கள் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த துப்பறியும் திரில்லராக உருவாகி வரும் இப்படம், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button