இயக்குனர் – மித்ரன்
நடிகர்கள்: விஷால், அர்ஜுன், சமந்தா, ரோபோ ஷங்கர், காளி வெங்கட்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு: ஜார்ஜ் சி வில்லியம்ஸ்
விஷால் மிகவும் துறுதுறுப்போடு இருக்கும் ஒரு ஆர்மி ட்ரெய்னிங் ஆபீசர். கடன் என்ற ஒன்றை விரும்பாதவர். சிறு வயதில் தனது தந்தையின் சில நடவடிக்கைகளால் கடன் வாங்கவே கூடாது என்று வாழ்ந்து வருபவர்.
ஒரு கட்டத்தில் தனது தங்கையின் திருமணத்திற்காக கடன் வாங்கும்படியான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார். ஒரு தனியார் வங்கியில் ஒரு போலியான பத்திரத்தை வைத்து லோன் வாங்குகிறார் விஷால். அடுத்த நாளே அந்த அக்கெளண்டில் இருந்து பணம் திருடப்பட்டுகிறது.
எப்படி வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடு போனது என விஷால் தேடி அலையும் போது, மறுமுனையில் அர்ஜுன் மிகப்பெரிய டிஜிட்டல் நெட்வொர்க்கை பயன்படுத்தி இதேபோல் பலரிடம் வங்கிக் கணக்கில் இருந்து கொள்ளையடித்ததை விஷால் கண்டுபிடிக்கிறார்.
எப்படி இது சாத்தியம் என்பதை விஷால் கண்டுபிடிப்பதே படத்தின் மீதிக் கதை
விஷால் தான் ஒரு ஆக்ஷன் கதைக்கு ஏற்ற ஹீரோ என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார். ஆறடி உயரம் கொண்டு ஒரு ஆர்மீ ஆபிசருக்கு உரித்தான ஒரு உடற்கட்டுடன் மிரட்டுகிறார்.
சமந்தாவுடனான காதல் காட்சிகளில் மிளிர்கிறார். படத்திற்கு ஒரு நாயகி வேண்டுமே என்ற எண்ணத்தில் சமந்தா வந்து செல்லாமல் ஆங்காங்கே ஒரு சில காட்சிகள் வைத்திருக்கிறார்கள்.
ரோபோ சங்கரின் காமெடி கலகலப்பூட்டுகிறது. அர்ஜுனின் வில்லத்தனம் படத்திற்கு பலம்.
ஆதார் அட்டையின் மறுபக்கத்தை வெளிப்படுத்தி ஒரு சில பயத்தை ஏற்படுத்திருக்கிறார் இயக்குனர். இருந்தாலும் இந்த பயம் ஏற்கக்கூடியதாக இருப்பது யோசிக்கக்கூடிய ஒன்று.
மக்களுக்கு தேவையான ஒரு கதையை எடுத்ததற்காக இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் எழவில்லை. பின்னனி இசையும் ஏமாற்றம்தான்.
ஜார்ஜ் சி வில்லியம்ஸின் கேமரா மிரட்டல். முதல் பாதி ஆமை போல் சென்றாலும் இரண்டாம் பாதி குதிரை ஓட்டம் கொள்கிறது இரும்புத்திரை
இரும்புத்திரை – வேகமான குதிரை.