Spotlightவிமர்சனங்கள்

செஞ்சி – ‘விமர்சனம்

கணேஷ் சந்திரசேகர், ரஷ்ய நடிகை கெசன்யா மற்றும் பலர் நடித்துள்ள படம் தான் இந்த செஞ்சி.

கதை எழுதி ,இயக்கி, தயாரித்து முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கணேஷ் சந்திரசேகர். ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படம் உருவாகி உள்ளது . ஆக்சன் ரியாக்சன் வெளியிடுகிறது.

இன்று 18-ஆம் தேதி இந்தப் படம் வெளியாகியுள்ளது.

ஒரு புதையல் வேட்டை சார்ந்த கதையாக உருவாகி இருக்கும் படம் தான் செஞ்சி.

பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சோபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறாள். அங்கே ஒரு ஓலைச்சுவடியைக் கண்டெடுக்கிறாள். அதில் ஏதோ ரகசியம் இருப்பதாகப் படவே தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் ஜாக் ஆண்டர்சனை நாடுகிறாள்.

அதில் ஒரு புதையலுக்கான ரகசிய குறியீடுகள் உள்ளதாக அவருக்குத் தெரிகிறது.சோபியாவுடன் இணைந்து அப்புதயலை தேட ஆரம்பிக்கிறார்.

இறுதியில் அந்தப் புதையலை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் செஞ்சி படத்தின் கதை.

புதையல் வேட்டையாக தொடங்கும் படம் என்பதால், ஒரு ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. ஆனால், கதை செல்லும் வேகத்தில் நாம் வைத்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிவிடுகிறது. கதை மிக மிக மெதுவாக செல்வதால் கதை மீதான ஈர்ப்பும் குறைந்து கொண்டே சென்று விடுகிறது.

புதையல் வேட்டை ஒரு புறம் நடக்க, தீவிரவாதிகளின் தேடுதல் வேட்டையும் ஒரு பக்கம் நடக்கிறது. அதே சமயம் ஐந்து சிறுவர்கள் சிறுமி வீட்டை விட்டு வெளியேறி காட்டுப் பகுதிக்குள் வந்து விடுகின்றனர்.

இந்த 3 கதையும் ஒரு புள்ளியில் இணையும் தருணத்தில் கதைக்கான திருப்புமுனை நடைபெறுகிறது.

இப்புதையல் கதைக்கும் 5 சிறுவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை இரண்டாவது பாதியில் புதிரை அவிழ்க்கிறார் இயக்குநர்.

இந்தப் படத்தில் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இயக்குநர் கணேஷ் சந்திரசேகர் நடித்துள்ளார்.வசன உச்சரிப்பில் அவர் இன்னமும் தேறிவர வேண்டும். ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வசனம் வருவதைத் தவிர்த்திருக்கலாம்.

வெளிநாட்டிலிருந்து வரும் ஆங்கிலேயப் பெண்மணியாக ரஷ்ய நடிகை கெசன்யாவிற்கு இன்னும் நடிப்பை நன்றாகவே கற்று கொடுத்திருக்கலாம்.

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசையில் கூடுதலாகவே கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.

செஞ்சி – அழகனா கதையெடுத்து திரைக்கதை செய்யத்தவறி விட்டார்கள்…

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close